5 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்காரர்கள் ஆவர். ஐந்தாம் எண்காரர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். எல்லோரிடமும் பாகுபாடின்றி மிக சரளமாகப் பழகுவார்கள். எல்லோரையும் எல்லா செயல்களுக்கும் ஊக்குவிப்பார்கள். பேச்சு நுணுக்கங்களை தெரிந்து வைத்து இருப்பார்கள். இவர்கள் எப்பேற்பட்ட காரியமாக இருந்தாலும் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை முட்டி மோதியாவது வென்று காட்டுவார்கள்.
இவர்கள் மனதில் நிறைய திட்டங்களை போட்டுக் கொண்டு
அதை செயல்படுத்துவதற்க்கு என்ன செய்ய வேண்டும் என யோசித்து கொண்டே இருப்பார்கள்.
இவர்களுக்கு ஏதாவது விஷயம் சரியாக புரியாவிட்டால் அது புரியும் வரை சம்மந்தபட்டவரை
விட மாட்டார்கள். எந்த விஷயத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள ஆசைபடுவார்கள்.
அதற்காக அதன் ஆணி வேர் வரை சென்று பார்த்து விடுவார்கள். எதையும் சற்று ஆழமாக
கற்றுக் கொள்ள விரும்புவார்கள்.
இவர்கள் பண விஷயத்தில் சுயநலவாதிகளாக இருப்பார்கள்.
தோல்வி தான் என தெரிந்தாலும் மனம் தளராமல் கடைசிவரை போராடுவார்கள். பிறர்
ரசிக்கும்படி பேசுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு தங்கள் மனதில்
உள்ளதை மறைக்கத் தெரியாது. எதையும் வெளிப்படையாக பேசி சில சமயம் சிக்கலில் மாட்டி
கொள்வார்கள்.
அவசர புத்திகாரர்களாகவும், பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களை புகழ்ந்து பேசினால் போதும். எளிதில் இவர்களிடம் இருந்து காரியங்களை
சாதித்து கொள்ளலாம். இவர்கள் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்கள்
பொறுமைக்கு சரியான எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.
இவர்கள் தனது மனம் போன போக்கில் தான் நடந்து
கொள்வார்கள். தனக்குப் பிடித்ததை தான் செய்வார்கள், யார் சொன்னாலும் ஏற்று கொள்ள
மாட்டார்கள். எந்தத் தொழிலில் இவர்கள் ஈடுபட்டாலும், அதை லாபகரமாக மாற்றி காட்டுவார்கள். இவர்களிடம் ஒரு
தனித்திறமை காணப்படும். ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்ய வேண்டும் என்று
எண்ணுவார்கள்.